ந்த குழந்தையும் நல்ல குழந்தையே மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே…..

என்பது மிகவும் நிதர்சனமான உண்மை. அதை நம் கண் முன் தினமும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு மட்டுமல்ல தந்தையின் பங்களிப்பும் முக்கியமானது.மனித வாழ்க்கையில் குழந்தை பருவம் அல்லது சிறுவர் பருவம் மிக அழகானது. அந்த பருவத்திலே பிள்ளைகள் அதிகம் கற்றும் அறிந்தும் கொள்கிறார்கள். பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி சிறுவர் பருவத்திலே அதிகமாக இருக்கும் என்கிறது சர்வே. புத்தகத்தில் மட்டுமல்ல தனது சூழலிலிருந்தும் கற்றுக் கொள்கிறார்கள். சிறுவர்களின் சூழல் பெற்றோர் தானே. அவர்களை பார்த்தும் அவர்கள் சொல்வதை கேட்டும் தான் வளர்க்கிறார்கள் என்பது உண்மை.குழந்தையின் முதல் டீச்சர் பெற்றோர், முதல் ஸ்கூல் வீடு. உளவியல் படி பெற்றோர் இரு வகை.உலகின் பெரும்பாலான பெற்றோர் இதில் ஒரு வகையாக இருக்கிறார்கள்.

*CP (critical parents ) விமர்சிக்கும் பெற்றோர்

இந்த வகை பெற்றோர் எப்போதும் பிள்ளைகளின் செயல்களில் குறை கண்டுப் பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.பிள்ளைகளின் செயல்களை விமர்சித்துக் கொண்டு இருப்பார்கள். இந்த பெற்றோரின் வளர்ப்பில் வளரும் பிள்ளைக்கு பொசிட்டிவ் எண்ணம் ஏற்படுவது குறைந்து விடும். சுயமாக செயற்பட தயங்குவார்கள்.அவர்களின் எண்ணங்கள் பெரும்பாலும் நெகட்டிவ்வாகவே இருக்கும்.இந்த பிள்ளை தான் செய்யும் எந்த வேலையும் சரியாக இருக்காது என்ற எண்ணத்துடனே செயற்படும். அதோடு தன்னால் எதையுமே சரியாக செய்ய முடியாது என்ற எண்ணமும் பிள்ளையின் மனதில் இருக்கும்.

*NP (nurturing parents) ஊட்டி வளர்க்கும் பெற்றோர்

இப்பெற்றோர் பிள்ளைகளுக்காக எல்லா முடிவுகளையும் தாங்களே எடுப்பார்கள். அதாவது பிள்ளைகளின் எந்த விடயமாக இருந்தாலும் இவர்களே முடிவு எடுப்பர்.பிள்ளை சுயமாக முடிவு எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்திலும் கூட தாமே முடிவு எடுத்து விடுவார்கள். இன்னும் சரியாக புரிய வைக்க வேண்டும் என்றால் சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலே வரும் பிரகாஷ்ராஜின் கேரக்டர் தான் இந்த NP பெற்றோர். இந்த பெற்றோர் வளர்ப்பில் வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் தனியாக முடிவெடுக்க தடுமாறுவார்கள். சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டிய சில பர்சனல் விடயங்களில் கூட முடிவெடுக்க இன்னொருவர் உதவியை நாடும் நிலை ஏற்படும். காலம் முழுக்க வேறொருவரை சார்ந்தே முடிவுகளை எடுக்கும் நிலை இருக்கும்.

ஆக நீங்க CP அல்லது NP வகை பெற்றோராக இது வரை இருந்திருந்தால் மாறிக் கொள்ளுங்கள்.
நீங்கள் பிள்ளைகளின் குறைகளை எடுத்து சொல்லுவது அவர்களை திருத்தி மீண்டும் அவர்கள் அதை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தானே அவர்கள் வீணாகி போவதற்கு இல்லையே….. ஆகவே தவறு செய்யும் போது எடுத்து சொல்லுங்கள் தவறை சுட்டிக் காட்டுவதோடு நிற்காமல் அதை திருத்தி எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள். ஒரு போதும் பிள்ளைகளின் தவறுகளை விமர்சிக்காதீர்கள். மற்றவருடன் ஒப்பிட்டும் மற்றவர் முன் விமர்சித்தும் பேசாதீர்கள். இது அவர்களை மனதளவில் மிகவும் பாதிக்கும்.தவறுகளின் போது தட்டிக் கொடுங்கள். சரியானதை அன்புடன் சொல்லி கொடுங்கள். பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்கள்.ஆனால் அதற்காக அட்வைஸ் பண்ணி போரடிக்காதீர்கள்! முக்கியமாக பிள்ளைகள் ஒரு முறை செய்த தவறை அடிக்கடி சொல்லி குத்திக் காட்டாதீர்கள்.

பிள்ளைகளின் நன்மையில் பெற்றோரை விட அக்கறை யாருக்கு இருக்கிறது?… ஆனால் அதற்காக எல்லா விடயங்களிலும் நீங்களே முடிவெடுக்காமல் சின்னச்சின்ன விடயங்களில் அவர்களின் விருப்பபடி முடிவெடுக்க விடுங்கள். அவர்கள் சம்மந்தமான முடிவுகளின் போது அவர்களிடமும் கலந்து பேசுவதில் தவறில்லையே! உங்கள் முடிவுகளையும் எண்ணங்களையும் அவர்களில் திணிக்காதீர்கள்! அவர்கள் முடிவு தவறாக இருக்கும் என்பதால் தானே அவர்களை முடிவெடுக்க விடுவதில் உங்களுக்கு பயம். ஒரு விடயத்தில் அவர்களை முடிவெடுக்க விடுங்கள். நீங்களும் முடிவெடுங்கள். உங்கள் முடிவையும் அவர்களது முடிவையும் கம்பயார் பண்ணி, இரண்டு முடிவுகளதும் நன்மை தீமைகளை எடுத்து சொல்லுங்கள்.அவர்களே புரிந்து ஏற்றுக் கொள்ளவார்கள்.அதற்காக உங்கள் முடிவை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பேச்சு வார்த்தை நடத்தாமல் உண்மையாகவே எது நல்லது என்று பேசுங்கள். ஒரு வேளை பிள்ளையின் முடிவு சரியாக இருந்தால் அது படியே நடக்க அவர்களுக்கு சான்ஸ் கொடுத்து தான் பாருங்களே!

பிள்ளை வளர வழி ஏற்படுத்தி கொடுக்காமல்

வழி விட்டு கொடுங்கள்…..

உங்கள் பிள்ளை

சிறந்த பிரஜையாக வளரும்……

மோகனா

One thought on “இதில் யார் நீங்கள்?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s