காட்டுக்கே ராஜா ஆண் சிங்கம் தான் என்றாலும் கூட அது வேட்டைக்கு செல்வதில்லை. குகைக்குள் மட்டுமே அடங்கி போகிறது அதன் வீரம்.பெண் சிங்கம் தான் அலைந்து திரிந்து வேட்டையாடி உண்ண கொடுக்கும் ஆண் சிங்கத்துக்கே.எல்லா விலங்கிலும் ஆணை விட பெண் விலங்கிற்கு வேட்டை திறன் அதிகம். மோப்பசக்தி,செவி கூர்மை,பார்வை கூர்மை, சுவை உணர்ச்சி என்பன பெண்ணுக்கு இயற்கையாகவே அதிகம். மனிதனிலும் இதுவே பொது விதி. அதனால் ஆதி கால மானுடர்களில் பெண்கள் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக உணவு தேடி நாடோடிகளாக செல்வார்கள். அந்த கூட்டங்களின் தலைவர்கள் பெண்கள்தான். பெண்களின் வழிகாட்டலில் அந்த குழுக்கள் இயங்கும். ஆனால் கால ஓட்டத்தில் பெண்களிடம் இருந்த தமைத்துவம் ஆண்களால் பறிக்கபட்டு பெண்கள் ஆண்களின் அடிமைகளாக மாறி போனார்கள். ஆணாதிக்கத்தில் சிக்கிய பெண் அதில் இருந்து மீண்டு வர இன்றும் முயற்சிக்கிறாள். இருந்தாலும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. இந்த ஆணாதிக்க உலகிலும் ஒரு கூட்டம் மட்டும் எந்த தடைகளும் இல்லாமல் தமது வாழ்க்கையை சுகந்திரமாகவும்,தம்மை தாமே ஆளும் தலைவிகளாக இருக்கிறார்கள்.

“உமோஜா” கிராமம் கென்யாவின் வட பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மட்டுமே வாழ்கின்ற ஒரு கிராமம். இது தலைநகர் நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் அமைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர் தப்பிய 15 பெண்களைக் கொண்ட குழுவினரால் உருவாக்கப்பட்டது. இந்த கிராமத்தின் தலைவியாக பிரித்தானிய இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ரெபேக்கா லோலோசோலி  செயற்பட்டு வருகிறார். இங்கு வாழ்பவர்கள் பெண்களுக்கு
எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவர்.

உமோஜா கிராமத்தில் இணைவதற்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு வாழும் பெண்கள் பாரம்பரிய உடையும், ஆபரணங்களையும் அணிய வேண்டும். இங்கு புகைப்பிடிப்பதற்கும், பெண் உறுப்புச் சிதைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் இருக்கும் கிராமத்துப் பெண்களுக்குப் படிப்பு, பெண் உரிமைகள், ஆண்-பெண் சமத்துவம், வன்முறையில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும்.

கிராம தலைவி ரெபேக்கா 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 5 குழந்தைகள். இவர் பிரித்தானிய இராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பலாத்காரத்தைக்
காரணம் காட்டி இவரது கணவர் இவரை விற்க முடிவெடுத்தார். இனி ஒரு நிமிடம் கூட இங்கே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்த ரெபேக்கா பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றுதிரட்டிக் கொண்டு
தனது கிராமத்தை விட்டே கிளம்பினார். ஒற்றுமை என்று பொருள்படும் “உமோஜா” என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார். பொட்டல் நிலத்தில் தங்குவதற்கு ஓர் எளிமையான வீட்டைக் கட்டினார். பழங்குடி உணவுகளைச் சமைத்து விற்க ஆரம்பித்தார். எதிர்பார்த்த அளவுக்கு உணவு விற்பனை இருக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய நகைகள், கைவினைப் பொருட்கள் செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்றார். இந்தத் தொழில் நன்கு அமைந்தது. கூடவே பழங்குடி நடனம், பாட்டு என்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிவந்த பெண்கள், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்கள், பெண் உறுப்புச் சிதைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண்கள், கணவனின் வன்முறைகளைத் தாங்க முடியாத பெண்கள், படிக்க அனுமதி கிடைக்காத பெண்கள், பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்கள் என்று தன்னை நாடிவந்த ஏராளமானவர்களை தன்னுடன் சேர்த்து அடைக்கலம் கொடுத்தார். 2015ன் கணக்கெடுப்பின் படி இந்தக் கிராமத்தில் 47 பெண்களும், 200 குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர்.

பெண்கள் மட்டும்! எந்த ஆணுக்கும் அனுமதி இல்லை. எந்த ஆதிக்கத்துக்கும் அனுமதி இல்லை. தங்கள் வாழ்வை தங்கள் இஷ்டப்படி வாழ்கிறார்கள். தங்களை போன்ற பெண்களுக்கு ஆதரவாகவும் உலகின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் உமோஜா பெண்கள் இருக்கிறார்கள். ரெபேக்காவின் இந்த புதுமுறை போராட்டம் சம்புரு இன மக்களிடம் சில மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது. ஆனாலும் அவர்களின் சுதந்திரத்தை கண்டு எரிச்சலடைந்த சில ஆண்கள் அவர்களது நிம்மதியை சிதைக்க எல்லா விதத்திலும் முயற்சிகளை செய்து வருகிறார்கள்.அங்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுப்பது,அங்கு இருக்கும் பெண்களின் உறவுகளை அனுப்பி அவர்களை மீண்டும் வர சொல்லி மிரட்டுவது,கிராமத்துக்குள் மறைமுகமாக சென்று பணம்,பொருட்கள் என்பவற்றை திருடுவது என அவர்கள் அறிவுக்கு எட்டின எல்லா தீதுகளையும் செய்கிறார்கள்.பெண்கள் சுதந்திரமாக வாழ்வதும்,தனியே துணிந்து இருப்பது அவர்கள் மனதில்
ஏற்படுத்தி இருக்கும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடே அவை.ஆரம்பத்தில் இருந்தே தமக்கு அடங்கி வாழ்ந்த பெண்கள் தம் கண் முன் சுதந்திரமாக இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும் இந்த கிராமத்தை எடுத்துக்காட்டாக கொண்டு அங்கிருந்து சில மைல் தூரத்தில் “நச்சாமி” என்ற கிராமம் உருவாகியுள்ளது. அங்கு ஆண்கள் வசிக்கிறார்கள் தான். ஆனால் கிராமத்தின் தலைமைத்துவம்
பெண்களிடம்… இங்கு ஆண்கள் வாசிக்க வேண்டும் என்றால் தலைவியின் விதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். சிம்பிளான விதிகள் தான்!… அங்கு ஆண்கள் தங்கள் மனைவியுடன் மட்டும்
தான் வாழ வேண்டும்,பெண்களை சமமாக மதிக்க வேண்டும். இவ்வளவு தான். ஆனால் இது போன்ற விதிகள் உலகம் முழுக்க இருக்குமேயானால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் உலகம்!!! உண்மையை சொன்னால் உலகில் உள்ள பெண்களில் 98% பெண்கள் அந்த கிராமங்களில் வாழ ஆசைப்பட்டாலும்
ஆச்சரியம் இல்லை…..!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s