காதல் ஆசை யாரை விட்டதோ…

அஞ்சான் திரைப்பட பாடல்

உண்மை தானே நண்பர்களே! உணர்ச்சியுள்ள எல்லா ஜீவன்களும் வாழ்வில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதல் வசப்படுவது இயற்கை. காதல் என்று சொன்னதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றும். எவ்வாறாயினும் காதல் ஒரு அழகான உணர்வு😍.

யாருக்கு எப்போது யார் மீது காதல் வரும் என்று தெரியாது, சரியாக சொன்னால் காதல் கூட நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போல தான்😁.காதல் வந்தால் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும், நட்சத்திரம் எல்லாம் நிலவாக மாறும் இதெல்லாம் நிஜமாவே நடக்குமா???🤔 சங்கர் பட க்ராபிக்ஸில் சாத்தியமாகலாம்😌.

காதல் ஒண்ணியும் கடவுள் இல்லையடா

இந்த எழவு எல்லாம்

ஹார்மோன் செய்யும் கலகம் தானடா..

வைரமுத்தின் ஆழமான கருத்துள்ள பாடல் வரிகள் அது. நிச்சயமாக நம்ம உடலில் இருக்கும் oxytocin என்ற ஹோர்மோன் தான் இந்த காதல் மற்றும் அதனுடன் தொடர்பான சேட்டைகளுக்கும் காரணம்😉.

காதல் என்பது ஒரு ஆணுக்கு பெண் மீது,பெண்ணுக்கு ஆண் மீதும் வருவது மட்டுமல்ல காதல்🤷‍♀️. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல காதல்.”I love you!” என்ற வார்த்தை காதலர்களுக்கு மட்டும் பட்டயம் போட்டுக் கொடுத்து விட்டோமல்லவா நாம்😐.மேலைத்தேய (தேவையற்ற) கலாச்சாரங்களில் முழுவதும் மூழ்கிப் போனாலும் கூட இன்னும் நாம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை😕 நம்மில் பெரும்பாலானோர் இந்த மூன்று வார்த்தையும் காதலர் தினமும் காதலர்களுக்கு மட்டும் என்று நினைத்து வாழ்கிறோம்.

❤தாய்க்கு கரு வந்த நாள் முதல் சிசு மீதும்,தந்தைக்கு கையில் ஏந்திய நொடி முதல் குழந்தை மீதும்,அண்ணனுக்கு தங்கை மீதும்,அக்காளுக்கு தம்பி மீதும்,ஒரு கலைஞனுக்கு கலை மீதும்,ஒரு கவிஞனுக்கு மொழி மீதும்,மழைக்கு மண் மீதும்,கடலுக்கு கரை மீதும்,வண்டுக்கு பூ மீதும்,தேனீக்கு தேன் மீதும்,போராளிக்கு புரட்சி மீதும்,நண்பர்களுக்கு நட்பு மீதும்,ஊடகவியலாளருக்கு செய்தி மீதும்,அரசியல்வாதிக்கு பதவி மீதும்,விவசாயிக்கு நிலம் மீதும்…….இந்த நிலத்திற்கு நம் உடல் மீதும் காதல் காதல் காதல்❤

பாரதிக்கு தமிழ் மீதிருந்த காதல் தானே அவனை புதுமை கவிதைகள் படைக்க வைத்தது.எடிசனின் அறிவியல் காதல் தானே மின்குமிழை தந்தது.ஒரு இயக்குனரின் சினிமா காதல் தானே நல்ல திரைப்படங்களை தருகிறது.ஆக காதல் யாருக்கும் யார் மீதும் எது மீதும் எப்போதும் காதல் வரலாம். காதலை காதல் செய்யும் யாராக இருந்தாலும் காதலர் தினம் கொண்டாடலாம்😀.

உன்னில் என்னில் உள்ளது காதல்

ஒவ்வொரு உயிரும் செய்வதும் காதல்

உலகம் முழுதும் உலவும் காதல்

ஒன்ஸ் மோர் படப்பாடல்

காதல் எப்போதும் தவறில்லை.காதல் செய்யும் நமக்குள் தான் தவறு. காதல் என்பதற்கும் காமம் என்பதற்கும் இடையே ஏராள வேறுபாடுகள் இருப்பதை சிலர் அறிய மறந்ததால் காதல் செய்வது குற்றமாகிப் போனது நம் சமூகத்தில்🤦‍♀️. காதல் காதல் காதல்…காதல் இல்லையேல் சாதல் சாதல் சாதல்….. அன்புக்கு ஒத்த சொல்தான் காதல்😍.

எனக்கு காதல் மேல் உள்ள காதல் இந்த பதிவை உங்களுக்கு தந்தது💃.

காதலை கொண்டாடுவோம் காதலுடன்😘

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s