Episode 3

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே பூங்கொடியை உலகத்தில் பிரசவித்து விட்டு கண்ணை மூடி கொண்டாள் மணியின் மனைவி பார்வதி. உதிரம் தாண்டி இந்த உலகை முதல் முதல் காண வந்த அந்த சிசுவுக்கு உலகம் தந்த வரவேற்ப்பு தாயை விழுங்கியவள் என்ற பெயர் தான். குறை சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா மக்களே?? மனைவி செத்துப்போனால் மறுநாளே கணவன் புது மாப்பிள்ளை என்று சொல்வதும், ஆவதும், ஆக்குவதும் நம் சமூகத்தில் பழகிப் போன ஒரு எழுதப்படாத விதி.மணிக்கும் அப்படியான வாய்ப்பு வழங்கப்படுகிறது… “இந்த பச்சை புள்ளைய வச்சிக்கிட்டு அந்த பசங்க ரெண்டு பேரையும் வச்சிக்கிட்டு நீ தனி ஆம்பள எப்படி வாழ முடியும்?உனக்காக இல்லனாலும் மணி உன் குழந்தைகளுக்காகவாது இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ… ” அதற்கு மணி “இதுக்கு மேல எனக்கு எதுக்கு கல்யாணம்?இனி இந்த மூணும் தான் என்:வாழ்க்கை! என் உலகம்! எல்லாமே” என்று மறுக்கவே “ஆம்பள நீ.. உனக்கு என்ன வயசு ஆகிருச்சு?? இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ இப்படி பண்றது ஒன்னும் ஊர் உலகத்துல புதுசு இல்லையே?!..” என்று ஊர் வாய்கள் தம் நியாயத்தை எடுத்து சொல்கிறது.இந்த நியாயமெல்லாம் ஆண்களுக்காகவே எழுதப்பட்டதோ ? ஏனென்றால் கணவன் இறந்து போன மனைவி விதவையாகவே பார்க்கப்படுகிறாள்.. அவள் வயதோ, அவளது பிள்ளைகளோ எதுவும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அவள் தனித்து நிற்ப்பது யாருக்கும் பெரிதாக வலிப்பதில்லை. இந்த சமூக கட்டுப்பாடுகளை தாண்டி ஒரு வேலை மறுமணம் செய்துக் கொண்டால் கூட சமூக விரோதியாக பார்க்கும் கண்கள் இல்லாமல் இல்லை.

தொடரும்…..

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s