16 வயதினிலே….

Episode 4 மறுமணம் என்பது ஆணுக்கு மட்டுமே உகந்தது என்று நம்பும் சில ஜீவன்கள் இன்றும் வாழத்தான் செய்கிறது. ஊரார் எவ்வளவு சொல்லியும் மணி மறுமணம் செய்ய ஒத்துக் கொள்ளவே இல்லை. பார்வதியின் நினைவிலே தன் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். காற்றிலே கற்பூரம் கரைவது போல காலம் கரைந்து ஓடியது.சேகர், ராஜன், பூங்கொடி மூவரும் அன்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக வளர்ந்தனர். தந்தை சொல்ல மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்து … Continue reading 16 வயதினிலே….

வர(ம்) தட்சணையா?? தண்டணையா??

தொடக்கம் மாங்கல்யம்தந்துனானேனாபின்பு ஜீவிதம்துந்தனானேனா....... சினிமா பாடல் அமர்க்களமாக ஆரம்பித்து அக்கப்போரில் போய் முடிந்து விடுகிறது இன்று பல திருமணங்கள். அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து சொந்தமும் பந்தமும் புடை சூழ ஒரு புது உறவை உருவாக்கி வாழ்வின் புது அத்தியாயத்தை தொடங்கி கனவுகளோடு திருமணம் எனும் புது பயணத்தை ஆரம்பிக்கும் இரு மனங்களுக்கு இடையே அன்பு, அரவணைப்பு, ஒற்றுமை, விட்டுக்கொடுத்து போகும் இயல்பு இருந்தால் வாழ்க்கை அமோகமா இருக்கும் என பெரியவங்க சொல்லி கேட்டுருக்கோம்... ஆனால் இன்னைக்கோ … Continue reading வர(ம்) தட்சணையா?? தண்டணையா??