முழுமையாய் பிறந்ததாலோ அவஸ்தை? 🤔

கூனாய் பிறந்திருந்தால்உங்களை எதிர்த்துநின்றிருக்க மாட்டேன்!குருடாய் பிறந்திருந்தால்உங்கள் பாரபட்சங்களைகண்டிருக்க மாட்டேன்!செவிடாய் பிறந்திருந்தால்உங்கள் ஏச்சுப்பேச்சுகளைகேட்டிருக்க மாட்டேன்!ஊமையாய் பிறந்திருந்தால்உங்களிடம் எதிர்த்துப்பேசியிருக்க மாட்டேன்!பேதையாய் பிறந்திருந்தால்என் கோபதாபங்களை உணர்ந்துவெளிகாட்டியிருக்க மாட்டேன்!முட்டாளாய் பிறந்திருந்தால்உங்கள் தவறுகளைஅறிந்திருக்க மாட்டேன்!ஐயகோ!!!நானோ ஆறறிவும்முழுதாய் பெற்ற முழு மனிதி அல்லவா!?!அதனால்தானோ இத்தனைஅவஸ்தைகள் பூமியிலே???😣😣~ Moni ~

இதுவும் ஜாலியாக தான் இருக்கும்😁

இன்றைய நாட்களில் நம்மை சுற்றி எது நடந்தாலும் அதற்கு நம் ரியாக்க்ஷன் வைகைபுயல் வடிவேலுவின் எதாவது ஒரு டெம்ப்ளட்டாக தான் இருக்கும்😃 அதுவும் சோஷியல் மீடியாக்களில் எல்லாமே மீம் டெம்ப்ளட்க்கள் தான் அதிகளவில் பதிலாக வரும். மீம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப் போச்சு...அந்த மீம்மில் நமக்கு பிடிக்காத வார்த்தை இருந்தால் கூட சிரிச்சுட்டு போய்ருவோம்...ஆனால் நமக்கு நெருக்கமான அல்லது தெரிந்த யாரவது விளையாட்டாகவோ கோபத்திலோ அதே வார்த்தையை சொல்லிட்டால் நம்ம பண்ற அலப்பறைக்கு … Continue reading இதுவும் ஜாலியாக தான் இருக்கும்😁

💝ஆதலால் காதல் செய்வீர்💝……

காதல் ஆசை யாரை விட்டதோ...அஞ்சான் திரைப்பட பாடல் உண்மை தானே நண்பர்களே! உணர்ச்சியுள்ள எல்லா ஜீவன்களும் வாழ்வில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதல் வசப்படுவது இயற்கை. காதல் என்று சொன்னதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றும். எவ்வாறாயினும் காதல் ஒரு அழகான உணர்வு😍. யாருக்கு எப்போது யார் மீது காதல் வரும் என்று தெரியாது, சரியாக சொன்னால் காதல் கூட நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போல தான்😁.காதல் வந்தால் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும், நட்சத்திரம் எல்லாம் நிலவாக … Continue reading 💝ஆதலால் காதல் செய்வீர்💝……

ஒரே ஒரு வாழ்க்கை!

ஏன் பிறக்கிறோம் என்றும்,யாராக பிறக்கிறோம் என்றும் தெரியாமல்,அறியாமல் பிறப்பது தவறல்ல.அதுவே பிரபஞ்ச நியதியும் கூட.ஆனால் ஏன் பிறந்தோம் ஏன் வாழ்ந்தோம் என்று அறியாமலும் யாருக்கும் அறிவிக்காமலும் இறந்து போவதே தவறு என்று கூற வேண்டும்.பிறப்பு என்பது ஒரு சம்பவம், ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான வாழ்க்கையை நாம் வாழும் விதம், நம் இறப்பை சரித்திரமாக மாற்ற வேண்டும். அப்படி வாழ்ந்த, வாழ்கின்றவர்களே சுற்றும் பூமியின் நினைவு புத்தகத்தில் சரித்திர புருஷர்களாக எழுதி வைக்கப்படுகிறார்கள் நண்பர்களே! ஏதோ பிறந்தோம் … Continue reading ஒரே ஒரு வாழ்க்கை!

ரொம்ப கஷ்டமப்பா……2

வணக்கம் நண்பர்களே🙏 காதல் சோதனைகள் பற்றி ரொம்ப கஷ்டமப்பா….. பதிவில் பார்த்தோம். இப்போ அதில் சொல்லி முடியாத விடயங்கள் பற்றி பார்க்க போறோம். காதலிக்குற பொண்ணை காரணம் இல்லாமல் காரணம் காட்டி கழட்டி விடுவதும், நீயும் வேணாம்; உன் காதலும் வேண்டாம் சொல்லிட்டு ஓடுற பொண்ணை துரத்தி துரத்தி காதல் தொல்லை கொடுப்பது சினிமாவில் மட்டுமல்ல நம்ம நிஜ வாழ்க்கையில் கூட நடக்க தானே செய்கிறது....😥 நான் ஒட்டு மொத்த ஆண் இனத்தையே குறை சொல்ல வரல...... … Continue reading ரொம்ப கஷ்டமப்பா……2

ரொம்ப கஷ்டமப்பா…..

வணக்கம் நண்பர்களே! மிக நீண்ட நாட்களுக்கு பின் #singapenn இல் நீண்ட தமிழ் பதிவில் உங்களை சந்திக்கிறேன். இன்றைய பதிவு இதற்கு முன் பேசிய விடயம்தான். நான் மட்டும் இல்லைங்க என்னை போல பல ஊடகவியலாளர்கள் எழுதும், நம் சோஷியல் மீடியா போராளிகளின் #டேக் போராட்டங்களில் அதிகம் போஸ்ட் செய்யப்படும் எப்பவும் பரபரப்பான ஒரு டோபிக்தான்...... #பெண்கள். அட இவ்வளவு பில்டப் பெண்களுக்கா என்று குழம்பி போகாதீங்க நட்புக்களே....... யார் எவ்வளவு எழுதினாலும் யார் என்ன போஸ்ட் … Continue reading ரொம்ப கஷ்டமப்பா…..